திருப்பத்தூர் மாவட்ட கருவூல அலுவலகம் தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்ட கருவூல அலுவலகத்தை கலெக்டர் சிவன்அருள் துவக்கி வைத்தார்.

Update: 2021-03-24 18:06 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கருவூல அலுவலகத்தை கலெக்டர் சிவன்அருள் துவக்கி வைத்தார்.

கருவூல அலுவலகம்

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அனைத்துத் துறைகளும் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இங்குச் செயல்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலகம் கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆணையிடப்பட்டு திருப்பத்தூர் சார் கருவூலம் அலுவலகத்தில் இயங்கி வந்தது. 

தற்போது புதிய மாவட்ட கருவூல அலுவலகம் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ஆசிரியர் நகர் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலக பக்க வாட்டில் மூக்கனூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. 
பணப் பரிவர்த்தனை

திருப்பத்தூர் மாவட்ட கருவூல அலுவலகத்தை கலெக்டர் சிவன் அருள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கருவூல துறையின்கீழ் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் சார் கருவூலங்கள் இயங்கும். மாவட்ட கருவூலம் அமைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் அலுவலக அனைத்துத்துறை அரசு அலுவலர்களின் மாதாந்திர ஊதியம் தொடர்பான பணிகள், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர பணிகள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிய கட்டிடத்தில் பணிகள் முடிந்த பின்னர் நிரந்தரமாக இவ் அலுவலகம் மாற்றப்படும் என அதிகாரிகள் ெதரிவித்தனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மண்டல இணை இயக்குனர் (கருவூலத்துறை) சாந்தி, திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, மாவட்ட கருவூல அலுவலர் கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்