பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிறப்பு பாதுகாப்பு பார்வையாளர் ஆய்வு

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிறப்பு மேலிட பாதுகாப்பு பார்வையாளர் பாண்டோ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-03-24 18:04 GMT
திருக்கோவிலூர், 

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாகவும், சுமுகமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில்  வீரபாண்டி, ஆற்காடு மற்றும் பில்ராம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகள்  பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
 இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக  திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி சிறப்பு மேலிட பாதுகாப்பு பார்வையாளர் பாண்டோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இரும்புக்கரம்

அப்போது அவர் அங்கிருந்த போலீசாரிடம்,  வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு யாரேனும் தொந்தரவு கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். குறிப்பாக கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் யாரேனும் செயல்பட்டால் அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்