கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-03-24 18:03 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சையில் குணமடைந்து 5 பேர் வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரையில் கொரோனாவால் 8 ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 ஆயிரத்து 115 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 94 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்