கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-03-24 17:41 GMT
சாயல்குடி, 
கடலாடி ஊராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தார். கடலாடி ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உருமாறிய கொேரானா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ேமலும் கடலாடி ஊராட்சியில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதமும், வியாபாரிகளுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்டோ மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலாடி ஊராட்சி செயலர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்