முத்தையாபுரத்தில் கொடி அணிவகுப்பு
முத்தையாபுரத்தில் கொடி அணிவகுப்பு நடந்தது.
ஸ்பிக் நகர்:
அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிப்பதற்காக முத்தையாபுரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி, பேரணியை வழி நடத்திச் சென்றார். முத்தையாபுரம் முதல் பஸ்ஸ்டாப்பில் இருந்து தொடங்கிய இந்த பேரணி வடக்குத்தெரு, தோப்புத் தெரு, சுந்தர் நகர், பாரதி நகர், தவசி பெருமாள் சாலை, ஸ்பிக் நகர் வழியாக முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.