‘சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழ்கிறது’ - நத்தம் விசுவநாதன் பிரசாரம்
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்வதாக நத்தம் விசுவநாதன் பிரசாரம் செய்தார்.
கோபால்பட்டி,
நத்தம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நத்தம் தொகுதிக்கு உட்பட்ட கிரா மங்களில் சூறாவளி பிரசாரத் தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் அவர் நேற்று சாணார்பட்டி ஒன்றி யத்திற்கு உட்பட்ட வேம்பார் பட்டி, செடிப்பட்டி, விளக்கு ரோடு, வி.குரும்பபட்டி, பெரு மாயூர், ஆவிளிபட்டி, களத்துப் பட்டி, கண்ணமனூர், மரு நூத்து, சரவணப்புதூர், கோட் டைப்பட்டி, புதுஆவிளிபட்டி, சாமிநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப் போது அவருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும், பொது மக்கள் மலர்தூவியும் வரவேற் றனர். ஆவிளிபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பூசாரி கள் பேரமைப்பு சார்பில் நத்தம் விசுவநாதனுக்கு கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாக்கு சேகரிப்பின்போது நத்தம் விசுவநாதன் பேசிய தாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் நத்தம் தொகுதியில் ரூ.454 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக் கப்பட்டுள்ளது. மின்சாரத்தை பொறுத்தவரை துணை மின் நிலைய விரிவாக்கம், மின் மாற்றிகள் தரம் உயர்த்துதல் என அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான மின்வசதியை செய்து கொடுத்துள்ளோம்.
இதுதவிர சாலை வசதி, பள்ளிகள் தரம் உயர்வு, அதற்கு தேவையான கட்டிட வசதிகள், சுற்றுச்சுவர் என பல்வேறு பணிகள் நடை பெற்றுள்ளன. எனினும் தேவைகள் இன்னும் உள்ளன அவை மீண்டும் வரும் அ.தி.மு.க. ஆட்சியில் செயல் படுத்தப்படும். கோணப்பட்டி நீர்த்தேக்கம் வனத்துறையின் அனுமதியுடன் கண்டிப்பாக கட்டப்படும். வளர்ச்சி பணி களை பொறுத்தவரை சாதி, மத, கட்சி வேறுபாடின்றி, அனைத்து பகுதி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப் படுகிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் தெரிவித்தபடி, விலை யில்லா வாஷிங் மெஷின், ஆண்டிற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 என அனைத்து வாக்குறுதிகளும் உங்களுக்கு கிடைக்க மீண்டும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மருநூத்து கிராமத்தில் வாக்கு சேகரித்த நத்தம் விசுவநாதன், அங்குள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் வழிபட்டார். அங்கு அவருக்கு முஸ்லிம்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வெற்றி பெற பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பேசிய நத்தம் விசுவநாதன், தமிழகத் தில் அ.தி.மு.க. அரசு சிறு பான்மை மக்களின் பாது காப்பு அரணாக திகழ்கிறது. நான் உங்களின் ஒருவன், உங்கள் சகோதரன். இப் பகுதியில் நடைபெற்ற, நடை பெறும், நடக்கப்போகும் பணிகள் என அனைத்தும் அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டவை. எனினும் விடுபட்ட சில பணிகளும் கண்டிப்பாக நடைபெறும் என்றார்.
பிரசாரத்தின்போது, தமிழ் நாடு பஞ்சாலை மற்றும் பொது தொழிலாளர் சங் கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நத்தம் விசுவநாதனை சந்தித்த னர். அப்போது குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க வேண் டும். கல்லூரியில் பயிலும் மாணவ&மாணவிகள் படித் துக்கொண்டே வேலைக்கு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும். நத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மேலும் ஆவிளிபட்டி, கம்பிளியம்பட்டி, சுக்காம் பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், அக்கட்சி களில் இருந்து விலகி நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த னர்.
இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுரேஷ், தெற்கு ஒன்றிய தலைவர் செல்லத் துரை உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.