திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாபுரோடு,தேவதானம் பகுதிக்கு மீண்டும் பஸ் வசதி - தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாபுரோடு,தேவதானம் பகுதிக்கு மீண்டும் பஸ் வசதி செய்து தரப்படும் என தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-24 05:18 GMT
திருச்சி,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜன நாயக முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று காலை மலைக்கோட்டை அருகே இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து தேவதானம், சஞ்சீவி நகர், டவுன் ஸ்டேஷன் ரோடு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தெருத்தெருவாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். 

அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது தேவதானம் பகுதி மக்கள் கடந்த தி.மு.க. ஆட்சியில் கே.என்.நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பாபு ரோடு, தேவ தானம் பகுதிக்கு பஸ் வசதி செய்து கொடுத்தார். ஆனால் அந்த பஸ்கள் இப்போது வரு வதில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் மீண்டும் எங்களுக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதனைகனிவுடன் கேட்ட வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தி.மு.க. ஆட்சி மலர்வது உறுதி. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். பாபு ரோடு, தேவதானம் பகுதிகளுக்கு மீண்டும் பஸ் வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

வேட்பாளருடன் மலைக்கோட்டைப் பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன், பாலக்கரை பகுதி செலாளர் மண்டி சேகர், மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்க பிரிவு மாநில துணை பொதுச் செயலா ளர் பிரபாகரன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொருளா ளர் ராஜா நசீர், இளங் கோவன் மற்றும் கம்யூ னிஸ்ட், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திர ளாக சென்றிருந்தனர்.

மேலும் செய்திகள்