இடங்கணசாலை பேரூராட்சியில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம்
இடங்கணசாலை பேரூராட்சியில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இளம்பிள்ளை:
இடங்கணசாலை பேரூராட்சி பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இடங்கணசாலை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடங்கணசாலை பஸ் நிலையம், மற்றும் கடை பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற 10 பேருக்கு தலா ரூ.200 வீதம், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.