சேலத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மோசடி

சேலத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் மீது நிதி நிறுவனத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2021-03-23 22:41 GMT
கன்னங்குறிச்சி:
ஏற்காடு அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவர் வேலை செய்து வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் அந்த நிதி நிறுவனத்தினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்