தென்காசியில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தென்காசியில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
தென்காசி, மார்ச்:
தேர்தலில் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாகவும், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஏற்கனவே தென்காசியில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதேபோன்று நேற்று இரண்டாவது முறையாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தெற்கு ரத வீதி, பழைய பஸ் நிலையம், கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, அம்மன் சன்னதி பஜார் வழியாக சுற்றிவந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.