குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

குளித்தல வேட்பாளர்களுடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-03-23 20:53 GMT
குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சேக்அப்துல்ரகுமான தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் நாராயணன் சந்திரசர்க்கார் கூறுகையில், தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் பாரபட்சம் இல்லாத அமைதியான தேர்தலுக்கு அது வழிவகுக்கும். தேர்தல் தொடர்பாக ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம். அவர் பாரபட்சமாக இருக்கிறார், அவரது நடவடிக்கை சரியில்லை என்றால் தேர்தல் பார்வையாளரான என்னிடம் புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகள் நடுநிலையாக நடந்து கொள்வார்கள். கட்சியினர் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பேசினார். இதையடுத்து பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக்அப்துல்ரகுமான், வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் போதும், வாக்குப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினார். கூட்டத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்