விழிப்புணர்வு கருத்தரங்கம்
சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரி மனோ கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சேரன்மாதேவி, மார்ச்:
சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி மனோ கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 156, 170, 171 சார்பில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சூழல் மேம்பாட்டு கோட்டம், சூழல் சரகம் களக்காடு இணைந்து உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மோனி தலைமை தாங்கினார். கல்லூரி வளாகத்தில் சுமார் 15 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக களக்காடு சூழல் சரக வனவர் அப்துல் ரகுமான் மற்றும் ராம்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் களக்காடு எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் எபனேசர், புலவன்குடியிருப்பு கார்த்திகேயன், பேராசிரியர்கள் தெய்வநாயகம், செல்லம்மாள், நிக்சன் கோவில்தாஸ், ஹேமலதா, இசக்கியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகாலிங்கம், பிரபாகாந்தா, சுந்தர்ராஜன் செய்து இருந்தனர்.