மும்பை-நாகர்கோவில் சிறப்பு ரெயில்கள் மதுரையுடன் நிறுத்தம்
இரட்டை அகல ரெயில் பாதை பணிக்காக மும்பை நாகர்கோவில் சிறப்பு ரெயில் மதுரையுடன் நிறுத்தப்படுகிறது.
மதுரை,மார்ச்
இரட்டை அகல ரெயில் பாதை பணிக்காக மும்பை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் மதுரையுடன் நிறுத்தப்படுகிறது.
அகல ரெயில் பாதை பணி
மதுரை ரெயில்வே கோட்டத்தில், மதுரை-வாஞ்சி மணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி மற்றும் நெல்லை இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையேயான 41 கி.மீ. தூர பணிகள் முடிந்து பாதுகாப்பு கமிஷனர் வேக ரெயில் மூலம் சோதனை நடத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, இந்த ரெயில் பாதையை அந்தந்த ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையுடன் நிறுத்தம்
இந்த நிலையில், மேலும் சில தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 27-ந் தேதிகளில் மும்பையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06339) மதுரை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், (பெங்களூரு) சேலம் வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, வருகிற 26-ந் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா, செங்கல்பட்டு, மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06351) மதுரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.