குடிமங்கலம் அருகே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குடிமங்கலம் அருகே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2021-03-23 18:12 GMT
குடிமங்கலம், மார்ச்.24-
பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குடிமங்கலம் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. பொள்ளாச்சி -தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்