கருமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

உத்தமபாளையம் அருகே கருமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.

Update: 2021-03-23 17:38 GMT
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. 

இந்த கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் நேற்று காலையில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

 தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். 

விழாவில் கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கோகிலாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்