ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு நேற்று ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும், முகவர் கமிஷனை உயர்த்த வேண்டும், கிராஷுட்டி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், பாலிஸிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிஸி கடனின் வட்டி விகித்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வேணுகோபால், செயலாளர் டார்வின் ஞானசேகரன், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர்.