அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வி.பி.பி.பரமசிவம் தீவிர வாக்குசேகரிப்பு
வேடசந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி வி.பி.பி. பரமசிவம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி, சித்துவார் பட்டி, மோர்பட்டி ஊராட்சிகள் மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளில் ஊர் ஊராக சென்று வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பி.பரசிவம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரை பெண்கள் ஆர்வத் தோடு ஆராத்தி எடுத்து வரவேற்றார்கள்.
பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பிபி.பரமசிவம் பேசியபோது கூறிய தாவது :-
அய்யலூர் பகுதியில் விவசாயிகள் அதிகளவு தக்காளி பயிரிட்டு வருகிறார்கள். அதே போல பல்வேறு காய்கனிகள் பயிரிடுகிறார்கள். தக்காளி அதிக விளைச்சல் காலங்களில் விலை குறைவால் இப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தக் காளி விவசாயிகள் என்றும் பயன்பெறும் வகையில் அய்யலூரில் ரூ. 24 கோடி செலவில் உணவு பூங்கா அமைக் கப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி ஜூஸ் தயாரிக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசா யிகள் முழுமையாக பயன்பெறு வார்கள்.
அய்யலூரில் இருந்து செந்துரை வரை பஞ்சந் தாங்கி மலைப்பகுதியை கடந்து செல்ல குண்டும் குழியுமாக இருந்த தார் சாலையை ரூ 4.50 கோடி செலவில் புதிய சாலை அமைத்துள்ளேன். இதனால் எனது தொகுதியில் உள்ள 19 கிராம மக்கள் மனமகிழ்சியோடு என்னை சந்திக்கும்போது பெருமையோடு கூறுகிறார்கள்.
காக்கையன்பட்டி மலைக்கிராமத்தில் மழைக் காலங் களில் போக்குவரத்து துண்டித்து அப்பகுதி மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலை நீண்ட காலமாக இருந்தது. நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுடன் அந்த பகுதி மக்களுக்காக ரூ. 1 கோடி செலவில் பாலம் கட்டி கொடுத்துள்ளேன். மலைக்கிராம மக்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளேன்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எந்த நேரத்தில் சென்றாலும் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் அதற்கு காரணம் எனது தொகுதி மக்கள் தான். அதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
தொகுதி மக்களின் கோரிக்கையை தெரிந்தவுடன் அதை நிறைவேற்றும்வரை எனக்கு தூக்கம் வந்ததில்லை. அந்த திட்டத்தை மக்கள் முன்கொண்டு வந்து நிறை வேற்றினால் தான் எனக்கு மனநிம்மதி கிடைக்கும். நான் மக்கள் பணியாற்றும் போது மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறை வேற்றியுள்ளேன். தமிழக முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடு கிறார். எனவே மீண்டும் முதல் -அமைச்சராக எடப் பாடி பழனிசாமி பதவி ஏற்க வேண்டும். வேடசந்தூர் தொகுதியை மேலும் வளமான தொகுதியாக மாற்றவும், தொகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல் படுவேன். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன்.
எனக்கு தொடர்ந்து நல் ஆதரவு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக் களித்து மக்கள் நலப்பணியாற்ற மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். என்று அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது முன் னாள் எம்.எல்.ஏ., தென்னம் பட்டி பழனிச்சாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் டி.சி.ராஜ்மோகன், அ.தி.மு.க. வடமதுரை ஒன்றிய கழக செயலாளர்கள் லட்சுமணன் (மேற்கு), தண்டாயுதம் (கிழக்கு), நகர செயலாளர்கள் கே.வி.சி.மணி (அய்யலூர்) பி.டி.ஆர்.பாலசுப்பிரமணி (வடமதுரை), பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சதாசிவம், தொகுதி பொறுப் பாளர் ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.