தி.மு.க. ஆட்சி அமைந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் - ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி பேச்சு

தி.மு.க. ஆட்சி அமைந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி பேசினார்.

Update: 2021-03-23 03:40 GMT
சோமரசம்பேட்டை,

தி.மு.க. வேட்பாளர் பழனி யாண்டி ஏழு நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இரண்டு நாட்களுக்கு முன்பு பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு செல்லும் இடமெல்லாம் மக்களிடம் ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது.  பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர்களை தூவி, கும்ப மரியாதைசெய்து வரவேற்பு அளித்தார்கள். 

கிராமங்களில் பிரசாரத்தை மேற் கொண்ட பழனியாண்டிக்கு  இளைஞர்கள் பட்டாசு வெடித்து வரவேற்கிறார்கள். மணப்பாறை வடக்கு ஒன்றியத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் பழனியாண்டி பேசுகையில், சென்ற முறை நான் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும், நான் இந்த முறை மக்களாகிய உங்களை நம்பித்தான் நாடி வந்திருக் கிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெண்களுக்கும், மக்களுக்கும் நன்மை கிடைக்கும். கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியால் அரசு மருத்துவமனைகள் செயலிழந்து கிடக்கிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். 

100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். கொரோனா காலத்தில் அ.தி.மு.க. அரசு கொடுக்க வேண்டிய நிதி மக்களுக்கு கிடைக்க தவறியதால் நமது ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கு ரூ.4,000 கிடைக்கும், முதல் கையெழுத்து அதுதான் என தலைவர் ஸ்டாலின் சொல்லி உள்ளார். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இதனையடுத்து மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது அந்த பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு பாலம் வேண்டும் என்றனர். நான் வெற்றி பெற்றதும் கட்டித்தருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்