தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக லால்குடியை மாற்றிக் காட்டுவேன் - த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி

தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக லால்குடியை மாற்றிக் காட்டுவேன் என்று த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-23 03:37 GMT
லால்குடி, 

திருச்சி மாவட்டம், லால்குடி தெற்கு ஒன்றிய பகுதிகளில் மணக்கால், வழுதியூர், ஆதிகுடி, கொன்னைக்குடி, அரியூர், செங்கரையூர் ஊராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சியில் வேட்பாளர் தர்மராஜுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவா் பேசுகையில், 

தான் வெற்றி பெற்றால் லால்குடி சட்டமன்ற தொகுதியை தமிழகத்தில் ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது எனது முதல் கடமை. என்னை எப்பொழுது வேண்டுமானாலும் பொதுமக்கள் வந்து சந்தித்து தங்களது குறையை கூறலாம். எனது தந்தை ரெங்கசாமி உடையார் புள்ளம்பாடி வாய்க்காலுக்கு வித்திட்டவர் ஆவார். லால்குடி தொகுதியை முன்னேற்ற மக்களுடன் இணைந்து பணியாற்றவே வந்துள்ளேன் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவர் அரியூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்ட போது ஒரு ஆண் குழந்தைக்கு ஸ்ரீ ராமச்சந்திரன் என்றும் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்றும் பெயர் சூட்டினார். 

பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் லால்குடி தெற்கு சூப்பர் நடேசன், வடக்கு வக்கீல் அசோகன், புள்ளம்பாடி வடக்கு ராஜாராம். மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி மேரி ஜார்ஜ், மாவட்ட இணை செயலாளர் ரீனா செந்தில், நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகர், பூவாளூர் ஜெயசீலன், மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா அருண் காந்தி, த.மா.கா. மாவட்ட தலைவர்கள் தெற்கு குணா, வடக்கு கே.வி.ஜி.ரவி மற்றும் அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க., பா.ம.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்