பரமக்குடி தொகுதி மக்களுக்கு விடியல் வரப்போகிறது - தி.மு.க. வேட்பாளர் முருகேசன் பேச்சு

பரமக்குடி தொகுதி மக்களுக்கு விடியல் வரப்போகிறது என தி.மு.க. வேட்பாளர் முருகேசன் பேசினார்.

Update: 2021-03-23 02:59 GMT
பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க .வேட்பாளர் செ.முருகேசன் மஞ்சள் பட்டினம், புதுநகர், வைகை நகர் , எமனேஸ்வரம்,சிலோன் காலனி ,பெரியகடை பஜார், காந்திசிலை, நேருஜி மைதானம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கைத்தறி நெசவாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள் என அனைத்து மக்களிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருக்கு ஏராளமானவர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர்முருகேசன்பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக பரமக்குடி தொகுதியில் எந்த திட்டங்களும்நடைபெறவில்லை.ஜி.எஸ்.டி.வரியால்நெசவாளர்களும்,வியாபாரிகளும் வணிகர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. இந்த பொதுத்தேர்தலின் கதாநாயகனாக தி.மு.க. தேர்தல் அறிக்கை உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் பரமக்குடி தொகுதி மக்களுக்கு செயல்படுத்துவேன். தொகுதி மக்களின் குறைகளை 100 நாட்களில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தொடங்கும் புதிய அமைச்சகம் மூலமாக தீர்க்கப்படும். தமிழக மக்களுக்கும், பரமக்குடி தொகுதி மக்களுக்கும் விடியல் கிடைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களில் ஒருவனாக என்றும் மக்கள்பணியாற்றுவேன். தொகுதி மக்கள் எந்நேரமும் என்னை நேரடியாக வந்து சந்திக்கலாம். குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.வெற்றிக்கனியை தி.மு.க.தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

அவருடன் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி, நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், உள்பட கூட்டணிகட்சி நிர்வாகிகளும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

மேலும் செய்திகள்