அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-23 01:20 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கிராமத்தில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைப்பதாக தெரிவித்தனர். 

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்