சேலம் மாவட்டத்தில் ரூ.36½ கோடி தங்கம் பறிமுதல்-கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் ரூ.36½ கோடி மதிப்பிலான தங்கம் பறக்கும் படை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-22 22:40 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ரூ.36½ கோடி மதிப்பிலான தங்கம் பறக்கும் படை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
பறக்கும் படை சோதனை
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும், வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.45 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 
ரூ.36½ கோடி
அதே போன்று ரூ.41 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 89.58 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.18 ஆயிரம் மதிப்பில் 90 சேலைகள், ரூ.36 கோடியே 60 லட்சம் மதிப்பிலான தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்