தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
அலங்காநல்லூர்
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு மருத்துவக் குழுவினர்களால் பேரூராட்சியின் செயல் அலுவலர் தேவி, இளநிலை உதவியாளர் அங்கயர்கண்ணி மற்றும் எழுத்தர்கள், தூய்மை பணியாளர்கள் தடுப்பூசிகளை போட்டு கொண்டனர். மேலும் பொது மக்களும் அதற்கான ஆவணங்களுடன் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.