தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-22 20:16 GMT
அம்பை, மார்ச்:
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது மாமனாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சுபாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்