கொரடாச்சேரி பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரம்

வெயில் சுட்டெரித்து வருவதால் கொரடாச்சேரி பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய வங்கிகள் கடன் வழங்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.

Update: 2021-03-22 18:07 GMT
கொரடாச்சேரி:
வெயில் சுட்டெரித்து வருவதால்  கொரடாச்சேரி பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய வங்கிகள் கடன் வழங்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர். 
செங்கல் தயாரிக்கும் பணி 
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா நெல் சாகுபடி நிறைவடைந்தது. அதனை  தொடர்ந்து கோடைக்கால பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கொரடாச்சேரி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் செங்கல் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள திடல்கள், வீட்டு கொல்லைபுறங்கள் ஆகிய இடங்களில் செங்கல் சூளைகள் அமைத்து செங்கல் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. 
கடன் வழங்க வேண்டும்
இதுகுறித்து செங்கல் தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஆற்றங்கரைகளில் மண் எடுப்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் செங்கல் தயாரிப்புக்கு தேவையான வண்டல் மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்து வண்டல் மண் வாங்க வேண்டியுள்ளது. மேலும் செங்கல் சூளை எரியூட்டுவதற்கான மரங்கள் தட்டுப்பாடும் உள்ளது. இதனால் எரிபொருளான மரங்களையும் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. இந்த காரணங்களால் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. எனவே செங்கல் உற்பத்தியாளர்களுக்கு  தேசிய வங்கிகள் கடன் வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்