சாயல்குடியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

சாயல்குடியில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-22 17:36 GMT
சாயல்குடி, 
சாயல்குடி யூனியன் வங்கி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் திராவிடமணி என்பவரின் காரில் சோதனையிட்டபோது எந்த ஒரு ஆவணமும் இன்றி ரூ. 6 லட்சம் இருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சேகர், முனியசாமி ஆகியோர் திராவிடமணி வசம் இருந்த ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்