முட்டைகள் ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்தில் சிக்கியது

போடி அருகே முட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

Update: 2021-03-22 17:16 GMT
போடி:
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி முட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று தேனி, போடி வழியாக கேரள மாநிலம் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. 
அந்த வேன் போடி முந்தல் சாலை பகுதியில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய அந்த மினி லாரி ஒருகட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மினி லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமாயின. 
மேலும் அதில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போடி குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்