உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி விழா

உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.

Update: 2021-03-22 11:06 GMT
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு  பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், மற்றும் நாடு நலம் பெற வேண்டியும் அனைத்து சமுதாய மக்களும் சகோதர பாசத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் பாடல்கள் பாடி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்பாள் உள்பிரகாரத்தில் சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தேறியது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சுந்தர ஈசன் மற்றும் ஊர்மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்