பழனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

பழனி சட்டமன்ற தொகுதி யில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட் பாளர் ரவிமனோகரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-03-22 08:51 GMT
பழனி,

பழனி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட் பாளராக போட்டியிடும் ரவிமனோகரன் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் பழனி நகர், நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர், எல்லம நாயக்கன்புதூர், வேலூர், கரடிக்கூட்டம், கிருஷ்ணாபுரம், தாதநாயக் கன்பட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், சித்தரேவு, லட்சுமாபுரம், நரிப்பாறை, குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, உள் ளிட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். 
முன்னதாக அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  
பிரசாரத்தின்போது மக்க ளிடையே பேசியதாவது:-

பழனியே எனது பூர்விகம். ஆகையால் பழனியில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளையும் முற்றிலும் அறிந்தவனாக உள்ளேன். எனவே மக்களுக்கு தற்போதைய தேவைகள் என்ன, அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை அறிந்துள்ளேன். 

ஆகவே அதை அறிந்து அதற்கென திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்.  உலக அளவில் சிறப்பு பெற்ற ஆன்மிக தலமாக பழனி உள்ளது. காரணம் தமிழ்கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டுள்ள 3&-ம்படைவீடு பழனியில் உள்ளது. இத்தகைய பழனி நகரத்தில் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவ் வாறு கிடப்பில் உள்ள அனைத்து மக்களுக்கான திட்டங்களையும் முறையாக செயல்படுத்த பாடுபடு வேன். 

குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள், பெண்கள், மாணவர்கள், முதியோர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் தேவையான திட்டங்களை தீட்டி அதை சிறப்பான முறையில் செய்து வருகிறது. எனவே மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான தேவைகள் தங்கு தடையின்றி நிறைவேற்றப்படும். பழனி சுற்று வட்டார கிராமங்களில் சாலை, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளை கண்டறிந்து அதை விரைவில் நிறைவேற்றுவேன். 

அதேபோல் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள  மினி கிளினிக்குகள் என்பது மிகவும் பயனுள்ள ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மக்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தற்போது அ.தி.மு.க. அறிவித்துள்ள வாக்குறுதிகளான இலவச சிலிண்டர், அரசு வேலை, பெண்களுக்கு உதவிதொகை ஆகியவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்