கரூர் வாங்கல் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி

கரூர் வாங்கல் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-22 08:13 GMT
கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கரூர் சின்ன ஆண்டான்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

குடிமராமத்து நாயகர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் விவசாயம் செழிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது வழியில் கரூர் மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் விவசாயம் செழிக்க 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கரூர் வாங்கல் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். அதேபோன்று மருத்துவக்கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பும், சித்த மருத்துவப் படிப்பும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை மருத்துவ கல்லூரி அதேபோன்று கரூரில் கால்நடை மருத்துவ கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். மேலும் இலவச ஓட்டுனர் பயிற்சி பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைக்கப்படும். எனவே கரூர் தொகுதி மக்கள் ஆதரவு அளித்து சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாதம் தொட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற இடங்கள் அனைத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்