துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே, துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே புதூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த பேர் தப்பி ஓடினர். மீதமுள்ள 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர் அதில் அவர்கள் ஏர்கன் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கருமத்தம்பட்டி அருகே ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அஜித்பாண்டியன் (27) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இரவு நேரங்களில் வருபவர்களை வழிமறித்து மிரட்டி பணம் பறிப்பதற்காக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
அத்துடன் தப்பி ஓடியது திருப்பூரை சேர்ந்த ஹரி (20) மற்றும் உன்னி (28) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ், அஜித் பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள் மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.