எடப்பாடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி மீது வழக்கு
எடப்பாடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்ககிரி:
எடப்பாடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருமணம்
எடப்பாடி தாலுகா பூலாம்பட்டி அம்மன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 23). கூலித்தொழிலாளி. இவருடைய உறவினரான 17 வயது சிறுமி 10-வகுப்பு படித்து பாதியிலேயே நின்று விட்டார்.
அந்த சிறுமியை அருணாசலம் அழைத்து சென்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அம்மன் குட்டூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
வழக்கு
திருமணத்துக்கு பிறகு பலமுறை சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்ததின் காரணமாக சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியை அங்கு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான அருணாசலம் மீது சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.