ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2021-03-17 21:38 GMT
சிவகாசி, 
சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
புகையிலை பொருட்கள் 
சிவகாசி கவிதா நகரில் பாரைப்பட்டியை சேர்ந்த விவேக் (வயது 35) என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு பட்டாசுக்கு சட்டிக்கூடு தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவகாசி சப்-கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-கலெக்டர் தினேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, தாசில்தார் ராமசுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். 
 குடோனுக்கு “சீல்” 
அப்போது அங்கு 12 மூடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
இதை சிவகாசி டவுன் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு போலீசார் “சீல்” வைத்தனர்.

மேலும் செய்திகள்