பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முக கவசம் அணியாத 295 பேருக்கு ரூ.42,100 அபராதம்

பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முக கவசம் அணியாத 295 பேருக்கு ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-17 21:20 GMT
பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முக கவசம் அணியாத 295 பேருக்கு ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நில வருவாய் ஆய்வாளர் கோமதி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்று சோதனை நடத்தினர்.
இதில் அந்த பகுதி வழியாக முக கவசம் அணியாமல் இருசக்கர மற்ற 4 சக்கர வாகனங்களில் வந்த 13 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
கருமாண்டிசெல்லிபாளையம்
இதேபோல் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பவானி ரோட்டில், பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த 11 பேருக்கு, அதிகாரிகள் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 200-யை அபராதமாக விதித்து, வசூல் செய்தனர்.
பவானி
மேலும் காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 45 பேருக்கு தலா 100 ரூபாய் என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 500-ம், பவானி நகராட்சி பகுதியில் 69 பேருக்கு தலா 100 ரூபாய் என மொத்தம் ரூ.6 ஆயிரத்து 900-ம், மொடக்குறிச்சி பகுதியில் 52 பேருக்கு ரூ.200 என மொத்தம் ரூ.10 ஆயிரத்து 400-ம், பெத்தாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் 55 பேருக்கு தலா 100 ரூபாய் என மொத்தம் ரூ.5 ஆயிரத்து 500-ம் அபராதமாக விதிக்கப்பட்டு் வசூலிக்கப்பட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரி சார்பில் அம்மாபேட்டை, பூனாச்சி, ஒலகடம் ஆகிய பகுதிகளில் ஒலகடம் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்று சோதனை நடத்தினர். இதில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முக கவசம் அணியாத மொத்தம் 295 பேருக்கு ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்