விருதுநகர்,
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வரை ரூ.32 லட்சத்து 78 ஆயிரத்து 110 உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதால் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 800 மட்டும் இன்னும் உரிமதாரரிடம் ஒப்படைக்கப்படாமல் விசாரணையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறினார்.