குடோனில் பரிசு பொருட்கள் பதுக்கல்

குடோனில் பரிசு பொருட்கள் பதுக்கல்

Update: 2021-03-17 20:06 GMT
திருமங்கலம்,மார்ச்
திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள ஒரு குடோனில் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி சசிகலா, திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் 100-க்கும் மேற்பட்ட வாளி, கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். சோதனை குறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்