மதுரை,மார்ச்.
மதுரை செல்லூர் கீழதோப்பு குமரன் சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 36 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.