மதுரையில் இருந்து ஐதராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

மதுரையில் இருந்து ஐதராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

Update: 2021-03-17 20:05 GMT
மதுரை, மார்ச்.
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கச்சிகுடா (ஐதராபாத்) ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07615) வருகிற 3-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் ஐதராபாதிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மறு மார்க்கத்தில், மதுரையில் இருந்து வருகிற 4-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் ஐதராபாத் புறப்பட்டு செல்லும். இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07616) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.25 மணிக்கு ஐதராபாத் ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, சித்தூர், பாகலா, மதனப்பள்ளிரோடு, கதிரி, தர்மாவரம், ஆனந்தப்பூர், தோனே, கர்னூல் சிட்டி, கட்வாள், மெகபூப்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் செய்திகள்