மதுரை,மார்ச்
பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், உடனே அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரை மேலவெளி வீதியில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல அலுவலகம் முன்பு அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும், பணி ஓய்வு பெற்றவர்களும் கலந்து கொண்டனர்.