மாட்டு வண்டி பந்தயம்
ஆப்பனூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் மாஷா திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சாயல்குடி,
கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் மாஷா திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. ஆப்பனூர் முதல் இளஞ்செம்பூர் விலக்கு ரோடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வண்டிகள் சென்று திரும்பின. இதில் பெரியமாடு பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரி மாடுகள் முதல் பரிசையும் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் கருணாகர ராஜாவின் மாடுகள் 2-வது பரிசையும், தூத்துக்குடி மாவட்டம் சண்முக குமாரபுரம் விஜயகுமார் மாடுகள் 3-வது பரிசையும் பெற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் தாளாகுளம் பஞ்சாயத்து தலைவர் மாடுகள் முதல் பரிசையும் மதுரை மாவட்டம் ஆனையூர் செல்வம் மாடுகள் 2-வது பரிசையும் கடம்பூர் கருணாகர ராஜா மாடுகள் 3-வது பரிசையும் பெற்றன. சிறிய மாடு 2-வது சுற்று பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் பூதலபுரம் மணிராஜ் மாடுகள் முதல் பரிசையும், மருங்கூர் மாடுகள் 2-வது பரிசையும், புதூர் பாண்டியபுரம் மாடுகள் 3-வது பரிசையும் பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு வண்டி ஓட்டியவர்களுக்கும் பணம், குத்துவிளக்கு, வெண்கல பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.