திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2021-03-17 16:23 GMT
திருப்பூர், 
திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையம் 
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வருகிற 6-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அட்டவணையின் படி வேட்பு மனுக்கள் கடந்த 12-ந் தேதி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை பெறப்படுகிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்கள் 22-ந் தேதி வரை திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதியும் நடைபெற இருக்கிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ளது.
கலெக்டர் ஆய்வு 
இந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட உள்ள அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, உதவி இயக்குனர் (நில அளவை) சசிகுமார், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்