தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை முககவசம் அணிய அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அனைவரும் முககவசம் அணிய அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியிலுள்ள கடைகளில் நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களையும் முகக்கவசம் அணிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கெரோனா பரவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதியில், ஆணையாளர் சரண்யா அரி உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
முககவசம் கட்டாயம்
அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா, சானிடைசர், முககவசம் பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
கடைகளில் கண்டிப்பாக சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.