100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அடிஅண்ணாமலை கூட்டுறவு நியாய நிலைக்கடையில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-03-17 11:41 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிஅண்ணாமலை ஊராட்சி கூட்டுறவு நியாய விலைக் கடையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

அதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு டேக் மற்றும் ஸ்டிக்கர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்கள், குடிநீர் கேன்கள், பாட்டில்களில் ஒட்டப்பட்டன.

வாக்காளர் உதவி எண் 1950 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் துணிப் பையில் அச்சிட்டும், பாமாயில் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

மேலும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்க வந்திருந்த வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எவ்வாறு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். 

மேலும் செய்திகள்