லால்குடியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் அறிமுக கூட்டம்

லால்குடியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜை அ.தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2021-03-17 10:30 GMT
லால்குடி, 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் த.மா.கா. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது இதில் அ.தி.மு.க. புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கலந்துகொண்டு லால்குடி சட்டமன்ற தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் தர்மராஜை அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி ஒன்றிய செயலாளர்கள் புள்ளம்பாடி தெற்கு சிவக்குமார், வடக்கு ராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகரன், புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், பூவாளூர் ஜெயசீலன், கல்லக்குடி பிச்சை பிள்ளை, த.மா.கா. மாவட்ட தலைவர்கள் தெற்கு குணா வடக்கு ரவீந்திரன்,த.மா.கா. மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாசம், வட்டார தலைவர்கள் ராஜமாணிக்கம், செல்வக்குமார், மாவட்ட வலைதள பிரிவு தலைவர் பொன்னரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுகன், பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் அசோக், மாவட்ட கலை இலக்கியப் பிரிவு தலைவர் தனசேகரன் பா.ம.க. மாநில துணை தலைவர் மணிமாறன் உட்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க. லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் வரவேற்றார். லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்