செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது 17 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2021-03-17 05:27 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு ரெயில் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (வயது25) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி செங்கல்பட்டு தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்