கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்
ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஈரோடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிடும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை தவிர மாநில முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சித்தோடு டெக்ஸ்வேலிக்கு இன்று (புதன்கிழமை) மதியம் வருகிறார். அங்கிருந்து பெருந்துறை செல்லும் அவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார். அங்கிருந்து மொடக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பின்னர் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் மக்கள் மத்தியில் பேசுகிறார். இதையடுத்து ஈரோடு சூரம்பட்டி 2-ம் நம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். நாளை (வியாழக்கிழமை) மதியம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.