மானூர் அருகே லாரி மோதி விவசாயி சாவு

மானூர் அருகே லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-16 22:01 GMT
மானூர்:
மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60), விவசாயி. இவர் நேற்று மதியம் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் பிள்ளையார்குளம் விலக்கு தென்புறம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ரஸ்தாவை சேர்ந்த ஆறுமுகம் (58) என்பவரை கைது செய்தார். முருகனுக்கு சரஸ்வதி (58) என்ற மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்