ஆத்தூரில் ரூ.1.44 கோடிக்கு பருத்தி ஏலம்

ஆத்தூரில் ரூ.1.44 கோடிக்கு பருத்தி ஏலம்

Update: 2021-03-16 21:19 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு சேலம், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தி தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.5 ஆயிரத்து 800 முதல் ரூ.7 ஆயிரத்து 600 வரையிலும், டி.டி.எச். ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 600 முதல் ரூ.10 ஆயிரத்து 150 வரையிலும், கொட்டுரக பருத்தி ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் 6 ஆயிரத்து 300 மூட்டை பருத்தி ரூ.1.44 கோடிக்கு விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்