வாக்கு எண்ணும் மையம் தயார் படுத்தும் பணி
வாக்கு எண்ணும் மையம் தயார் படுத்தும் பணி நடக்கிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு வருகிற 6 ந் தேதி நடைபெற உள்ளது. 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் பகுதி கம்பி வலைகளால் தடுப்பு அமைக்கப்படுவது வழக்கம். அதற்கான கம்பி வலைகளால் தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதுபோல் வேட்பாளர்களின் முகவர்கள் அமருவதற்கான பகுதியும் தயார் படுத்தும் பணி நடக்கிறது.