ரெயில்வே கேட் மீது மோதிய லாரி

ரெயில்வே கேட் மீது மோதிய லாரி

Update: 2021-03-16 20:34 GMT
திருமங்கலம்,மார்ச்
திருமங்கலத்தில் ரெயில்வே கேட் மீது லாரி மோதிய சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிக்குள்ளாயினர்.
திருமங்கலம் ரெயில்வே கேட்
திருமங்கலத்தில் விமானம் நிலையம் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் உள்ளது. தினமும் 70-க்கும் மேற்பட்ட முறை இந்த ெரயில்வே கேட் திறந்து மூடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ெரயில் செல்வதற்காக கேட் கீப்பர் வழக்கம் போல் கேட்டை மூடுவதற்கு முற்பட்டார்.
அப்போது கேட் மூடப்படுவதற்குள் டிப்பர் லாரி வந்து எதிர்பாராத விதமாக கேட் மீது மோதியது. இதில் கேட் உடைந்தது. கேட் கீப்பர் உடனே உஷார் ஆகி ெரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சில வினாடிகளில் ெரயில் வந்து கிராசிங்கை கடந்து சென்றது.
இந்த சம்பவத்தால் ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்க முடியவில்லை. இதனால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. பின்னர் ஒரு வழியாக சுமார் அரை மணி நேரம் கழித்து கேட் திறக்கப்பட்டது. அதன்பின்னர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரெயில்வே கேட்டை கடந்து சென்றன. 
பாதிப்பு
சாதாரணமாகவே ெரயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதில் நேற்று நடந்த இந்த சம்பவத்தால் நீண்ட நேரம் அந்தப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை தாமதப்பட்டு வருகிறது. எனவே இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து பாலத்தை கட்டி முடித்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்